

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் டிசம்பர் 26-ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. தற்போது இப்படம் டிசம்பர் 26-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
சந்துரு இயக்கத்தில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுனில், சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காமெடி க்ரைம் டிராமா பாணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் காட்சிகள் மக்களிடையே எடுபடவில்லை. இப்படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
’ரிவால்வர் ரீட்டா’ படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி மலையாளத்தில் இரண்டு படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழில் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து முடிக்கவுள்ளார். விரைவில் அப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.