

ஒவ்வொரு ஆண்டும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் அந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்கள், வெப் தொடர்களை பற்றிய அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2026-ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள படைப்புகள் குறித்த அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் 11 திரைப்படங்கள் மற்றும் 19 வெப் தொடர்கள் என மொத்தம் 30 படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இக்கா (Ikka): 1997-ல் வெளியான 'பார்டர்' படத்திற்குப் பிறகு சன்னி தியோல் மற்றும் அக்சய் கண்ணா மீண்டும் இணையும் படம். இது ஒரு 'கோர்ட்ரூம் த்ரில்லர்' வகையைச் சார்ந்தது. தியா மிர்சா, திலோத்தமா ஷோம் மற்றும் சஞ்சிதா ஷேக் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஹம் இந்துஸ்தானி (Hum Hindustani): 1950-களின் தொடக்கத்தில் இந்தியாவில் நடந்த முதல் தேர்தலை மையமாகக் கொண்ட வரலாற்றுப் படம். இதில் சையப் அலிகான், பிரதீக் காந்தி மற்றும் மீமி சக்ரவர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
லஸ்ட் ஸ்டோரீஸ் 3 (Lust Stories 3): கிரண் ராவ் மற்றும் விஷால் பரத்வாஜ் உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தில் ராதிகா ஆப்தே, விஜய் வர்மா மற்றும் அதிதி ராவ் ஹைதாரி நடிக்கின்றனர்.
கூஸ்கோர் பண்டிட் (Ghooskhor Pandat): டெல்லியின் ஒரு இரவில் நடக்கும் மர்மங்களை விவரிக்கும் க்ரைம் த்ரில்லர். மனோஜ் பாஜ்பாயி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நீரஜ் பாண்டே எழுத்தில் உருவாகியுள்ள இதனை ரித்தேஷ் ஷா இயக்கியுள்ளார்.
மா பெஹன் (Maa Behen): மாதுரி தீட்சித் மற்றும் திரிப்தி திம்ரி தாய்-மகளாக நடிக்கும் டார்க் காமெடி திரைப்படம்.
மேட் இன் கொரியா (Made In Korea): பிரியங்கா மோகன் மற்றும் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் நடிக்கும் தமிழ்-கொரிய கலாச்சாரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் படம்.
அக்யூஸ்டு (Accused): கொன்கொனா சென் சர்மா மற்றும் பிரதிபா ரந்தா நடிக்கும் படம். தன்பாலின ஈர்ப்பு, சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து பேசுகிறது.
டோஸ்டர் (Toaster): ராஜ்குமார் ராவ் மற்றும் சான்யா மல்ஹோத்ரா நடிக்கும் நகைச்சுவைப் படம்.
தக்க்ஷகுடு (Takshakudu): ஆனந்த் தேவரகொண்டா நடிக்கும் தெலுங்கு போக்லோர் (Folklore) த்ரில்லர்
காந்தாரி (Gandhari): டாப்சி பன்னு நடிக்கும் பழிவாங்கும் ஆக்ஷன் கதை.
கார்தவ்யா (Kartavya): சையப் அலிகான் மற்றும் ராசிகா துக்கல் நடிக்கும் திரைப்படம்.
ஃபேமிலி பிசினஸ் (Family Business): அனில் கபூர் மற்றும் விஜய் வர்மா நடிக்கும் கார்ப்பரேட் வார் த்ரில்லர்.
லெகசி (Legacy): மாதவன், கவுதம் கார்த்திக் நடிக்கும் கிரைம் த்ரில்லர் தொடர்.
ஆபரேஷன் சஃபேத் சாகர் (Operation Safed Sagar): கார்கில் போரை மையமாகக் கொண்ட தொடர். சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், தியா மிர்சா ஆகியோர் நடிக்கின்றனர்.
முசாஃபிர் கஃபே (Musafir Cafe): விக்ராந்த் மாசி நடிக்கும் டைம் டிராவல் சார்ந்த தொடர்.
ஹலோ பச்சோன் (Hello Bachhon): பிசிக்ஸ் வாலா அலாக் பாண்டேவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியுள்ள தொடர். வினீத் குமார் சிங் இதில் நடிக்கிறார்.
தலாஷ் (Talaash): பரினீதி சோப்ரா மற்றும் ஜெனிபர் விங்கெட் நடிக்கும் மர்மத் தொடர்.
இவை தவிர கபில் ஷர்மா ஷோ (S5), மிஸ்மேட்ச்டு (S4 - Final), கோஹ்ரா (S2), மாம்லா லீகல் ஹை (S2), மற்றும் புவன் பாமின் திண்டோரா (S2) ஆகியவையும் இந்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ளன.