‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5’ தொடரால் முடங்கிய ‘நெட்பிளிக்ஸ்’

‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5’ தொடரால் முடங்கிய ‘நெட்பிளிக்ஸ்’
Updated on
1 min read

நெட்​பிளிக்ஸ் தளத்​தில் 2016-ம் ஆண்டு வெளி​யான தொடர், ‘ஸ்ட்​ரேஞ்​சர் திங்​ஸ்’. வரவேற்​பைப் பெற்ற இத்​தொடரின் அடுத்​தடுத்த சீசன்​கள் உரு​வாகி உலகம் முழு​வதும் உள்ள ரசிகர்​களிடம் பாராட்​டைப் பெற்​றன. திகில், அறி​வியல் புனை​வு, புதிர், ஃபேன்​டஸி என அனைத்​தும் கலந்த ஜானரில் உரு​வான இத்​தொடரின் 5 வது சீசன், நவ.27-ல் வெளி​யானது.

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் இந்த தொடரைப் பார்க்க ஆர்வம் காட்டியதால் நெட்பிளிக்ஸ் தளம் முடங்கியது. அமெரிக்க பார்வையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். 15 ஆயிரத்துக்கும் அதிகமான பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டதாகப் புகாரளித்துள்ளனர். இந்தியாவிலும் இத்தளம் முடங்கியது.

இந்தச் செயலிழப்புக்கான காரணம் குறித்து நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. கடந்த 2022-ம் ஆண்டில் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4’ இறுதி 2 எபிசோட்கள் வெளியானபோதும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இத்தொடரின் முதல் எபிசோடு நேற்று முன் தினம் வெளியானது. 2-வது டிச. 25-ம் தேதியும், கடைசி எபிசோடு டிச.31-ம் தேதியும் வெளியாக இருக்கின்றன.

‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5’ தொடரால் முடங்கிய ‘நெட்பிளிக்ஸ்’
The Family Man 3 Review: நிதானமும் வன்முறையும்... கிட்டியதா நிறைவான அனுபவம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in