பழி​வாங்​கும் கதை​யுடன் வரும் ‘லிங்கம்’

பழி​வாங்​கும் கதை​யுடன் வரும் ‘லிங்கம்’
Updated on
1 min read

கதிர், திவ்யா பார​தி, சத்​யா, பூர்​ணிமா ரவி உள்பட பலர் நடித்துள்ள வெப் தொடர் ‘லிங்​கம்’. தமிழ் க்ரைம் த்ரில்​ல​ரான இத்தொடரை லக்‌ஷ்மி சரவணகு​மார் எழுதி இயக்​கி​யுள்​ளார். பிரசாந்த் பாண்டியராஜ் ஷோ ரன்​ன​ராக வழிநடத்​தி​யுள்​ளார். விகடன் டெலி​விஸ்​டாஸ் தயாரித்​துள்ள இந்​தத் தொடர் ஜூன் 26 முதல் ஜியோ ஹாட்​ ஸ்​டாரில் ஸ்ட்​ரீமிங் செய்​யப்​படு​கிறது.

“ஒரு கபடி வீரரின் வாழ்க்​கை​யில் நிகழும் மாற்​றத்​தைச் சொல்லும் விறு​விறுப்​பான குற்​றம் மற்​றும் பழி​வாங்​கல் கதை ‘லிங்​கம்’. ஒரு கொலைக் குற்​றச்​சாட்​டால் லிங்​கத்​தின் வாழ்க்கை முற்​றி​லும் மாறிப்​போகிறது.

கவுர​வம், அடை​யாளம் மற்​றும் சீருடை அணி​யும் எதிர்​காலம் என்ற கனவு​களு​டன் தொடங்​கும் அவரது பயணம், பின்​னர் அநீ​தி, பழி​வாங்​கல் நிறைந்த வன்முறைப் பாதை​யாக மாறுகிறது. அது எப்​படி, எங்கு முடிகிறது என்பது கதை” என வெப் தொடர்​குழு கூறி​யுள்​ளது. இதன் டிரெய்லர் வெளி​யாகி வரவேற்பைப் பெற்​றுள்​ளது.

பழி​வாங்​கும் கதை​யுடன் வரும் ‘லிங்கம்’
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in