

துல்கர் சல்மான், ராணா நடிப்பில் வெளியான ‘காந்தா’ திரைப்படம் டிசம்பர் 12-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘காந்தா’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. தற்போது இப்படம் டிசம்பர் 12-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘காந்தா’. இதில் துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரக்கனி இருவருமே போட்டி போட்டு நடித்திருந்தார்கள். ஆனால், அது வசூலில் பெரியளவில் எடுபடவில்லை.
தற்போது இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஓடிடியிலும் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது ‘காந்தா’ படக்குழு.