

ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் வெப் தொடர்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், விஜய் சேதுபதி, மோகன்லால், நாகர்ஜூனா உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், படைப்பாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் தமிழில் வெளியாகவுள்ள முக்கிய படைப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காட்டான்’, யோகிபாபு ’கெனத்த காணோம்’, கதிர் நடிக்கும் ‘லிங்கம்’, பிரியாமணி, ஆரி நடிக்கும் ‘குட் வைஃப்’ சீசன் 2, தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஹார்ட்பீட்’ வெப் தொடரின் சீசன் 3, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘லக்கி தி சூப்பர்ஸ்டார்’, எருமசாணி விஜய் குமார் நடிக்கும் ‘ரிசார்ட்’, கவுரி கிஷன் நடிக்கும் ‘லவ் ஆல்வேஸ்’ உள்ளிட்ட தொடர்கள், படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இது தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு படைப்புகள் குறித்த அறிவிப்பையும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.
எனினும் அவற்றின் வெளியீட்டுத் தேதி, தொழில்நுட்பக் குழுவினர் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.