

ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் நடத்தும் சவுத் அன்பவுண்ட் என்ற நிகழ்வினை முன்னிட்டு, ஜியோஹாட்ஸ்டார் குழுவினர் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
ஜியோஹாட்ஸ்டார் தென்னிந்திய தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு நிகழ்வு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கம் அளித்தனர்.
தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஆதரவை அவர்கள் முதல்வரிடம் விளக்கினர்.
வரும் டிசம்பர் 9 அன்று சென்னையில் ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், படைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள திறமையாளர்கள் பங்கேற்கிறார்கள். புதிய தென்னிந்திய படைப்புகள் இந்த நிகழ்வில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.