‘தி ராஜா சாப்’ ஓடிடி ரிலீஸ் எதிரொலி: ஹாட்ஸ்டார் தளம் முடங்கியது!

‘தி ராஜா சாப்’ ஓடிடி ரிலீஸ் எதிரொலி: ஹாட்ஸ்டார் தளம் முடங்கியது!
Updated on
1 min read

பிரபாஸ் நடிப்பில் உருவான ‘தி ராஜா சாப்’ திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியான நிலையில், தற்போது ஓடிடியில் படம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை படம் வெளியான சில நிமிடங்களிலேயே, லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஜியோஹாட்ஸ்டார் தளத்திற்குள் நுழைந்ததால் இணையதளம் முடங்கியது. குறிப்பாக Remind Me பட்டனை ஒரு கோடிக்கும் அதிகமானோர் அழுத்தியதே இந்த முடக்கத்துக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, தனது சர்வர் திறனை மேம்படுத்தியுள்ளதாக ஜியோஹாட்ஸ்டார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. “பிரபாஸ் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி, இப்போது தளம் சீரமைக்கப்பட்டுள்ளது” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் இப்படம் கடும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இதனால் எதிர்பார்த்த வசூலையும் இப்படம் பெறவில்லை. எனினும் ஓடிடியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளதால் முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்கு பதிப்பில் இடம்பெறாத பல காட்சிகள் ஓடிடி பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாருதி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுடன் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘தி ராஜா சாப்’ ஓடிடி ரிலீஸ் எதிரொலி: ஹாட்ஸ்டார் தளம் முடங்கியது!
‘பராசக்தி’ ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in