

போஸ் வெங்கட், காயத்ரி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள வெப் தொடர், ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’. ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘உப்பு புளி காரம்’, ‘போலீஸ் போலீஸ்’ போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ள இந்த வெப் தொடர், ஜவுளி வியாபாரம் செய்யும் தொழிலதிபரின் குடும்ப பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 4 உடன்பிறந்தவர்களின் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள இத்தொடரின் புரோமோக்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று இருந்தன.
நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் மனதைத் தொடும் தருணங்களைக் கொண்டுள்ள இத்தொடர் மே 27-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது. நீளமான ஒரிஜினல் தொடரான இதன் ஒவ்வொரு எபிசோடும் புதன்கிழமை தோறும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.