மனநிறைவை தந்த வெப்​தொடர் ‘முத்து என்​கிற காட்​டான்’ - விஜய் சேதுபதி மகிழ்ச்சி

மனநிறைவை தந்த வெப்​தொடர் ‘முத்து என்​கிற காட்​டான்’ - விஜய் சேதுபதி மகிழ்ச்சி
Updated on
1 min read

விஜய் சேதுபதி நடித்​துள்ள வெப் தொடர், ‘முத்து என்​கிற காட்டான்’. இதை ‘காக்கா முட்​டை’ மணி​கண்​ட​னும் பி.அஜித்​கு​மாரும் இணைந்து இயக்​கி​யுள்​ளனர்.

இதில் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்​ஷாத் அலி, ரிஷா ஜேகப்​ஸ், கலை​வாணி பாஸ்​கர், சிங்​கம்​ புலி, முத்​துக்​கு​மார், பாலாஜி சக்திவேல் உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்துள்ளனர். ராஜேஷ் முரு​கேசன் இசை அமைத்​துள்ள இந்த டார்க் காமெடி வெப் தொடர், ஜியோ ஹாட்​ஸ்​டார் ஓடிடி தளத்​தில் மார்ச் 27-ல் வெளி​யாக இருக்​கிறது. இதன் டிரெய்​லர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

இந்த டிரெய்​லர் குறித்து விஜய் சேதுபதி கூறும்​போது, “மணி​கண்​டன் முதன்​முதலில் காட்​டான் கதையை சொன்ன போது, 6 பக்​கங்​களைக் கொண்ட சுருக்​கக் குறிப்பை பகிர்ந்​தார். அவர் கற்​பனை செய்த கதா​பாத்​திர​மும் அதன் உலக​மும் என்னை உடனே ஈர்த்துவிட்​டது. இந்​தத் தொடரில் பணி​யாற்​றிய அனுபவம், ஒரு நடிக​ராக எனக்கு உண்​மை​யான மனநிறைவை அளித்​தது. இதைப் பார்ப்​பவர்​கள் ஏதாவது அர்த்​த​முள்ள ஒன்றை எடுத்​துச் செல்​வார்​கள் என்று நம்​பு​கிறேன்” என்​றார். இந்த வெப் தொடருக்கு மது நீல ​கண்​டன், என்​.ஷண்​முக சுந்​தர் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளனர்.

மனநிறைவை தந்த வெப்​தொடர் ‘முத்து என்​கிற காட்​டான்’ - விஜய் சேதுபதி மகிழ்ச்சி
Mindiyum Paranjum: லீனா அருளும் காதல் தரிசனம் | திரை தேவதைகள் 09

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in