

‘ஹார்ட்டிலே பேட்டரி’ என்ற புதிய வெப் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 16 அன்று வெளியாக உள்ளது.
ரெமாண்டிக் சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்த தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். குரு லக்ஷ்மன், பாதினி குமார் பிரதாக வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த வெப் தொடர் குறித்து நடிகர் குரு லக்ஷ்மன் கூறும்போது, “சித் கதாப்பாத்திரம் எனக்குள் உள்ள நகைச்சுவையை வெளிக் கொண்டு வர உதவியது. ‘ஹார்டிலி பேட்டரி’ ஒரு சாதாரண காதல் கதை அல்ல. மனது உண்மையில் என்ன விரும்புகிறது என்பதை ஆராயும் ஒரு பயணம். ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
இத்தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 16 அன்று வெளியாக உள்ளது. இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.