

பிரபல இந்தி நடிகையான தீபிகா படுகோன், தமிழில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதையடுத்து ஷாருக்கானின் ‘கிங்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை தீபிகா படுகோன் சர்வதேச ஆங்கில டிவி சீரியலில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உருவான டிவி தொடர் ‘த ஒயிட் லோட்டஸ்’.
காமெடி டிராமா வகை தொடரான இதை மைக் ஒயிட் இயக்கியுள்ளார். இதுவரை 3 சீசன்கள் வெளியாகி உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்பட்ட டிவி தொடராக இது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் நான்காவது சீசன் இப்போது உருவாகி வருகிறது.
இதில் நடிக்க தீபிகா படுகோனிடம் பேச்சு வார்த்தை நடந்தது. முதலில் இதில் நடிக்க ஆர்வம் காட்டிய தீபிகா படுகோன் இப்போது அதில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.