

‘த்ரிஷ்யம்’ படத்தில் கஜோல் நடித்திருந்தால் அதன் முதல் பாகமே வெளி வந்திருக்காது’ என அஜய் தேவ்கன் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
‘தி கிரேட் இந்தியன் கபில்’ நிகழ்ச்சியில் ‘த்ரிஷ்யம்’ பற்றி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். ‘தி கிரேட் இந்தியன் கபில்’ நிகழ்ச்சியின் 5-வது சீசன் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 26-ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அஜய் தேவ்கானுடன், ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, முர்னால் ஜாதவ், ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் இயக்குநர் அபிஷேக் பதாக் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
அந்த உரையாடலின் போது தொகுப்பாளர் கபில் சர்மா இயக்குநர் அபிஷேக் பதாக்கிடம், ‘அபிஷேக் ஜி, ‘த்ரிஷ்யம்’ முதல் பாகத்தில் நீங்கள் கஜோலை நடிக்க வைத்திருந்தால், அப்போதே அவர் எல்லாவற்றையும் சொல்ல வைத்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ எனக் கேட்கிறார்.
அதற்கு அருகில் இருந்த அஜய் தேவ்கான் சற்றும் யோசிக்காமல், ‘முதல் பாகமே வெளிவந்து இருக்காது’ என நகைச்சுவையாக கூறுகிறார். இந்த நிகழ்ச்சியில், ஜெய்தீப்பும் அஜய் தேவ்கானுடனான தனது தனிபட்ட தொடர்பைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
தொகுப்பாளர் கபிலும் அஜய் தேவ்கானுடனான உறவு பற்றி நகைச்சுவையாக பகிர்ந்து கொள்கிறார். அவர், ‘அஜயை எனக்கு 15 ஆண்டுகளாகத் தெரியும். நாங்கள் இதுவரை நான் நலமாக உள்ளேன்; நீ எப்படி இருக்கிறாய்? இப்படி இதுவரை 14 முறைதான் பேசியிருப்போம். படத்தில் கூட இதையேதான் பேசியிருப்போம்’ என்று தெரிவிக்கிறார்.
‘த்ரிஷ்யம்’ இந்தி படத்தின் மூன்றாவது மற்றும் இறுதி பாகமான ‘த்ரிஷ்யம்: தி கன்களூஷன்’ படம் அக்டோபர் 2 அன்று வெளியாக உள்ளது. இந்த இறுதி பாகத்திலும் விஜய்யாக அஜய் தேவ்கனும், அவரது மனைவியாக ஷ்ரியா சரணும், ஐஜி மீராவாக தபுவும் நடித்திருக்கிறார்கள். படத்தை அபிஷேக் பதாக் இயக்கி இருக்கிறார்.
மலையாளப் படத்தை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட ‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகம் 2015-ம் வெளியானது. அதனை மறைந்த நிஷிகாந்த் காம்த் இயக்கி இருந்தார். இரண்டாவது பாகம், அபிஷேக் பதாக் இயக்கத்தில் 2022-ல் வெளியானது. முதல் இரண்டு பாகங்களும் மலையாளப் படத்தின் மறு ஆக்கமாக இருந்தன. மூன்றாவது பாகத்தின் கதை சற்று மாறுபட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
தி கிரேட் இந்தியன் கபில் நிகழ்ச்சியின் இந்த 5-வது சீசன் செப்டம்பர் 26-ம் தேதி சனிக்கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது. நெட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இது ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீசனில் திரை, தொலைக்காட்சி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.