எப்போதும் ஈர்க்கும் கதாபாத்திரங்கள் - ராஷி கன்னா தகவல்

எப்போதும் ஈர்க்கும் கதாபாத்திரங்கள் - ராஷி கன்னா தகவல்
Updated on
1 min read

ராஷி கன்னா நடித்துள்ள வெப் தொடர் ‘லக்கே’. கிங், பாலக் திவாரி, லக் ஷ்விர் சிங் சரண், ரகுல் ரோஷன், கிரித்திர்கா பரத்வாஜ் என பலர் நடித்துள்ளனர்.

மே 8ம் தேதி வெளியாகும் இந்த வெப் தொடரை ஹிமாங் கவுர் இயக்கியுள்ளார். மியூசிக்கல் ஆக் ஷன் டிராமா தொடரான இது 7 எபிசோடுகளாக வெளியாகிறது. இதன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ராஷி கன்னா, தனது கதாபாத்திரத்தை பற்றிய சிறு குறிப்பையும் பதிவிட்டுள்ளார்.

அதில், "வெளிப்பார்வைக்கு இயல்பாகத் தெரிந்தாலும், மனதுக்குள் ஏதோ ஒரு பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் என்னை எப்போதும் ஈர்க்கின்றன. சில விஷயங்கள் நம்மை விட்டுப் போவதில்லை, அவை நாம் நகரும் விதத்தை மாற்றுகின்றன. விரைவில் வருகிறது ‘லக்கே' " எனப் பதிவிட்டுள்ளார்.

எப்போதும் ஈர்க்கும் கதாபாத்திரங்கள் - ராஷி கன்னா தகவல்
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in