15 மொழிகளில் வெளி​யாகும் துஷாராவின் ‘எக்​ஸாம்’

15 மொழிகளில் வெளி​யாகும் துஷாராவின் ‘எக்​ஸாம்’
Updated on
1 min read

சற்​குணம் இயக்​கி​யுள்ள சஸ்​பென்ஸ் டிராமா வெப் தொடர், ‘எக்ஸாம்’. துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்​பாஸ் முக்​கிய வேடங்​களில் நடித்​து உள்​ளனர்.

வால் ​வாட்​சர் ஃபிலிம்ஸ் தயாரிப்​பில், புஷ்கர் மற்​றும் காயத்ரி இணைந்து உரு​வாக்​கி​யுள்ள இந்த 7 எபிசோடு​கள் கொண்ட தொடர் மே15ம் தேதி பிரைம் வீடியோ​வில் வெளி​யாகிறது. போட்டித் தேர்​வு​களின் அழுத்​தம் நிறைந்த சூழலைப் பின்னணியாகக் கொண்ட இந்த சஸ்​பென்ஸ் டிரா​மா, பதற்​றம் நிறைந்த கதை​யாக உரு​வாகி​யுள்​ளது.

தமிழில் உருவான இத்தொடர், தெலுங்​கு, இந்​தி, மலை​யாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்​யப்​பட்​டும் ஆங்​கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்​டில்​களு​ட​னும் வெளி​யாகிறது.

15 மொழிகளில் வெளி​யாகும் துஷாராவின் ‘எக்​ஸாம்’
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in