

இந்த வாரம் திரையரங்குகளின் வெளியீட்டுக்குப் பிறகு பிறகு ஓடிடியில் முன்னணி திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் நாளை (மே 19) திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம். வின்டிசல் நடித்துள்ள ‘ஃபாஸ்ட் எக்ஸ்’ ஹாலிவுட் படத்தை நாளை திரையரங்குகளில் காண முடியும்.
நேரடி ஓடிடி ரிலீஸ்: வரலட்சுமி சரத்குமார், ஆரவ் நடித்துள்ள ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ நாளை (மே 19) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சன்யா மல்ஹோத்ரா, ராஜ்பால் யாதவ் நடித்துள்ள ‘காதல்’ (Kathal) திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நாளை முதல் காணக்கிடைக்கும்.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அறிமுக இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘ருத்ரன்’ படத்தை சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணமுடியும். அகில் அக்கினேனி, மம்மூட்டி நடித்துள்ள ‘ஏஜென்ட்’ திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் நாளை காணலாம்.
இணையத் தொடர்கள்: பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்பாக உருவாகியுள்ள ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜி தொடர் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
வாசிக்க: