

மலையாளத்தின் முதல் வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா” சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.
First Print Studios சார்பில் ராகுல் ரிஜி நாயர் என்பவர் தயாரிக்க, இயக்குநர் அஹம்மது கபீர் இந்த சீரிஸை இயக்கியுள்ளார். ஆஷிக் ஐமர் என்பவர் இந்த வெப் சீரிஸின் கதையை எழுதியுள்ளார், ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். நடிகர் லால் மற்றும் அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில் உருவாகியுள்ளது.
டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளி ஒருவரின் கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இதன் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.