மே 21-ல் ஓடிடியில் ‘விருபாக்ஷா’ ரிலீஸ்
சாய் தரம் தேஜ் நடிப்பில் உருவான ‘விருபாக்ஷா’ திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மே 21-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘விருபாக்ஷா’. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி தெலுங்கில், திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அஜனேஷ் லோக்நாத் இசையமைத்திருந்த இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் தயாரித்திருந்தது.
ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.90 கோடியை வசூலித்தது. படத்தின் மீதான வரவேற்பையடுத்து, மே 5-ம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் படம் வெளியானது. தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ‘விருபாக்ஷா’ வரும் மே 21-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
