

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடியில் வரும் மே 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ருத்ரன்’. இந்தப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், காளிவெங்கட், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார், சாம் சி.எஸ், தரண் குமார் உள்ளிட்டோர் இசையமைத்திருந்த இப்படம் ஆக்ஷ்ன் த்ரில்லர் பாணியில் உருவானது.
படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வரும் மே 14-ம் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.