"செங்களம்" இணைய தொடர் ட்ரெய்லர் வெளியீட்டு விழா - இது ஒரு பொலிடிகல் திரில்லர்: இயக்குநர்

"செங்களம்" இணைய தொடர் ட்ரெய்லர் வெளியீட்டு விழா - இது ஒரு பொலிடிகல் திரில்லர்: இயக்குநர்
Updated on
1 min read

“என் முதல் படத்திற்கு இருந்த அதே உணர்வில் தான் உங்கள் முன் முதல் வெப் சீரிஸிற்காக நிற்கிறேன். இந்த தொடர் ஒரு பொலிடிகல் திரில்லர். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும்” என செங்களம் இணையதொடரின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஜீ5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது "செங்களம்" இணையத் தொடர். அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.

இத்தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், “என் முதல் படத்திற்கு இருந்த அதே உணர்வில் தான் உங்கள் முன் முதல் வெப் சீரிஸிற்காக நிற்கிறேன். இந்த தொடர் ஒரு பொலிடிகல் திரில்லர். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும். கலையரசன் எந்த கதாபாத்திரம் தந்தாலும் அசத்தக்கூடியவர் இதிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். வாணி போஜன் மிக நல்ல நடிப்பைத் தந்துள்ளார். விஜி மேடம், ஷாலி, கண்ணன் என எல்லோருமே கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் இருவருமே எனக்கு மிகப்பெரும் பலம். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எதையும் எதிர்பாராமல் உழைத்துள்ளனர்” என்றார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், “இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள். இந்த ட்ரெய்லரை பார்த்தபோது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்கு பொறாமை ஏற்பட்டது. ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே, அது நல்ல படைப்பாகத்தான் இருக்கும். அந்த வகையில் எஸ்.ஆர். பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார். இந்த டிரெய்லரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசை தான். மிகச்சிறந்த இசையுடன் காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர்” என்றார். ஜீ5 “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in