‘கண்ணை நம்பாதே’ முதல் ‘வாத்தி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘கண்ணை நம்பாதே’ முதல் ‘வாத்தி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் நாளை (மார்ச் 17) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கல்யாண் இயக்கத்தில் காஜல் அக்ரவால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கோஷ்டி’(Ghosty) திரைப்படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.

உபேந்திர ராவ், ஸ்ரேயா நடித்துள்ள கன்னட திரைப்படமான ‘கப்சா’ திரைப்படம் பான் இந்தியா முறையில் நாளை வெளியாகிறது.

நந்திதா தாஸ் இயக்கத்தில் கபில்ஷர்மா நடித்துள்ள ‘ஸ்விகாடோ’ (Zwigato) மற்றும் ராணி முகர்ஜியின் ‘மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே’ (Mrs Chatterjee Vs Norway) ஆகிய இரண்டு இந்தி திரைப்படங்களும் நாளை திரையில் வெளியாகின்றன.

நேரடி ஓடிடி ரிலீஸ்: பாலியல் வன்கொடுமை குறித்து பேசும் ராஹத் காஷ்மியின் ‘ஆம் ஐ நெக்ஸ்ட்’ (Am I Next) இந்தி திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை முதல் காணலாம். ஜெகதீஷ் பிரதாப்பின் ‘சதி கனி ரெண்டு ஏகராலு’ (Sathi Gani Rendu Ekaralu) தெலுங்கு படத்தை ஆஹா ஓடிடியில் நாளை முதல் கண்டுகளிக்கலாம்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘தி வேல்’ (the whale) திரைப்படம் சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

சுஹாஷ், ரோஹினி, ஆஷிஸ் வித்யாத்ரி நடிதுள்ள ‘ரைட்டர் பத்மபூஷன்’ (Writer Padmabhushan) திரைப்படம் ஜீ5 ஓடிடியில் நாளை காணக் கிடைக்கும். புனித் ராஜ்குமாரின் ‘கந்தடாகுடி’ (Gandhadagudi) கன்னட படம் அமேசான் ப்ரைமில் நாளை வெளியிடப்பட உள்ளது.

இணையதொடர்கள்: ஜிம் சர்ப், இஷ்வாக் சிங்கின் ‘ராக்கெட் பாய்ஸ்’ இரண்டாவது சீசன் சோனி லிவ் ஓடிடி தளத்தில் தற்போது காணக்கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in