

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: ஜெயம் ரவி நடிப்பில் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் நாளை (மார்ச் 10) திரையரங்குகளில் வெளியாகிறது ‘அகிலன்’. வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘கொன்றால் பாவம்’ மற்றும் வெற்றி நடித்துள்ள ‘மெமரீஸ்’ படங்கள் நாளை திரைக்கு வருகின்றன. ராஜீவ் ரவி இயக்கத்தில் நிவின்பாலி நடித்துள்ள ‘தொறமுகம்’ (Thuramukham) மலையாள படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம். தவிர, ‘தூ ஜூதி மை மக்கர்’ (Tu Jhoothi Main Makkaar) இந்திப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: ஹாலிவுட் ஸ்போர்ட் ட்ராமாவான ‘சங்க் கேன் டங்க்’ (Chang Can Dunk) நேரடியாக நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: கவின், அபர்ணா தாஸ் நடித்துள்ள ‘டாடா’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை வெளியாகிறது. இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தை ஜீ5 ஓடிடி தளத்திலும், மாளவிகா மோகனன், மேத்யூ தாமஸின் ‘கிறிஸ்டி’ சோனி லிவ் ஓடிடியிலும் நாளை காணலாம். மம்மூட்டியின் ‘கிறிஸ்டோஃபர்’ அமேசான் ப்ரைமில் நாளை வெளியிடப்பட உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை முதல் காணக்கிடைக்கும்.
இணையதொடர்கள்: ‘யூ’ (you) 4-வது சீசனின் இரண்டாவது பாகம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. வைபவ், ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘ஆக்சிடன்டல் ஃபார்மர் அன்ட் கோ’ (Accidental Farmer&CO) சோனி லிவ் ஓட்டியில் நாளை வெளியாகிறது.