இந்த வாரம் ஓடிடி ரிலீஸில் தவறவிடக் கூடாத 4 படங்கள்

இந்த வாரம் ஓடிடி ரிலீஸில் தவறவிடக் கூடாத 4 படங்கள்
Updated on
1 min read

வெவ்வேறு ஓடிடி தளங்களில் கவனத்துக்குரிய படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன, எப்போது வெளியாகும் என்பது குறித்து பார்ப்போம்.

டாடா: நடிகர்கள் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டாடா’. ஜென் மார்டின் இசையமைத்திருந்த இப்படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வரும் மார்ச் 10-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

பொம்மை நாயகி: இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் கடந்த மாதம் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘பொம்மை நாயகி’. ஹரிகிருஷ்ணன், சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம்.குமார், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்திருந்தார். படம் வரும் மார்ச் 10-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டி: மாளவிகா மோகனன், மேத்யூ தாமஸ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘கிறிஸ்டி’. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். அல்வின் ஹென்றி இயக்கியுள்ள இப்படம் வரும் மார்ச் 10-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோஃபர்: பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘கிறிஸ்டோஃபர்’. ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அமலா பால், சித்திக், திலேஷ் போத்தன், ஷைன்டாம் சாக்கோ என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்திருந்தார். படம் நாளை (மார்ச் 9) அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in