மார்ச் 10-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’

மார்ச் 10-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’
Updated on
1 min read

யோகிபாபு நடிப்பில் உருவான ‘பொம்மை நாயகி’ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் கடந்த மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பொம்மை நாயகி’. நடிகர்கள் ஹரிகிருஷ்ணன், சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம்.குமார், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், யாழி ஃபிலீம்ஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசியிருந்த இப்படம், அதன் அழுத்தமான திரைமொழியால் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், படம் வரும் மார்ச் 10-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in