மார்ச் 3-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது மோகன்லாலின் ‘அலோன்’

மார்ச் 3-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது மோகன்லாலின் ‘அலோன்’
Updated on
1 min read

மோகன்லால் நடித்துள்ள ‘அலோன்’ திரைப்படம் வரும் மார்ச் 3-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் ‘கடுவா’, ‘காப்பா’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஷாஜி கைலாஷ் மோகன்லாலை வைத்து இயக்கிய படம் ‘அலோன்’. ‘மான்ஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து மோகன்லால் இப்படத்தில் நடித்திருந்தார். கடந்த ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் பிரித்விராஜ், மஞ்சுவாரியர், சித்திக், மல்லிகா சுகுமாறன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களைப்பெற்ற இப்படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்திருந்தார். ரூ.67 லட்சத்தில் உருவான ‘அலோன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.2.5 கோடியைக்கடந்து வசூலித்தது. இந்நிலையில் படம் வரும் மார்ச் 3-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in