

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: கவின் நடித்துள்ள ‘டாடா’ மற்றும் பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. சுகுமார் அழகர் சாமி இயக்கத்தில், ‘வர்ணாசிரமம்’, கார்த்திக் சிங்கா நடித்துள்ள ‘கொடை’ படங்கள் வெளியாகியுள்ளன. மம்முட்டியின் ‘கிறிஸ்டோஃபர்’, ஷோபின் ஷாயிர் நடித்துள்ள ‘ரோமன்சம்’ ஆகிய மலையாள படங்களை திரையரங்குகளில் காணலாம். நந்தமுனி கல்யாண் ராம் நடித்துள்ள ‘அமிகோஸ்’ தெலுங்கு படமும் திரையில் வெளியாகியுள்ளது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: ‘யூவர் ப்ளேஸ் ஆர் மைன்’ (Your Place or Mine) என்ற ஹாலிவுட் படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியான ‘துணிவு’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. நிவின் பாலி, ஆசிஃப் அலி, லால் நடிப்பில் உருவான ‘மஹாவீர்யார்’ மலையாள படம் சன்நெக்ஸ்ட் தளத்தில் காணக்கிடைக்கிறது. ரேவதி இயக்கத்தில் கஜோல் நடித்த ‘சலாம் வெங்கி’ இந்தி திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இணையதொடர்: விஜய் சேதுபதி, ஷாயித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபார்ஸி’ (farzi) அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.