மீண்டும் ‘லொள்ளு சபா’ டீம்... ‘ஜோக்கிங் பேட்’ எப்படி? - ரசிகர்கள் ரியாக்‌ஷன்

மீண்டும் ‘லொள்ளு சபா’ டீம்... ‘ஜோக்கிங் பேட்’ எப்படி? - ரசிகர்கள் ரியாக்‌ஷன்

Published on

புகழ்பெற்ற அமெரிக்க இணையத் தொடரான ‘பிரேக்கிங் பேட்’ தொடரின் ஸ்பூஃப் வீடியோவான ‘ஜோக்கிங் பேட்’ நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

ஜார்ஜ் வின்ஸ் கில்லிகன் இயக்கத்தில் பிரையன் க்ரான்ஸ்டன் (Bryan Cranston) நடித்துள்ள அமெரிக்க இணைய தொடரான ‘பிரேக்கிங் பேட்’ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 5 சீசன்களைக் கொண்ட இந்தத் தொடரின் முன்பகுதியான ‘பெட்டர் கால் சால்’ சீரிஸும் ரசிகர்களிடையே விரும்பி பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ‘பிரேக்கிங் பேட்’ தொடரின் ஸ்பூஃப் வீடியோவான ‘ஜோக்கிங் பேட்’ நெட்ஃப்ளிக்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. மனோகர், சுவாமிநாதன், ஜீவா,சேசு, ரவி, உதயகுமார், வெங்கட் ராஜா உள்ளிட்ட ‘லொள்ளு சபா’ படையே வீடியோவில் களமிறங்கியுள்ளது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்
“நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ‘லொள்ளு சபா’ குழுவை பார்ப்பதில் மகிழ்ச்சி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். ரசிகர்களில் பலரும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்கு நன்றி தெரிவித்து, “இந்த குழுவிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

‘லொள்ளு சபா’ குழுவின் இந்த வீடியோவால் நெகிழும் ரசிகர்கள் இன்னும் பல்வேறு தொடர்களை ஸ்பூஃப் செய்ய வேண்டும் என்றும், இந்த நடிகர்களை இன்னும் அழுத்தமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கமென்ட்ஸ்களில் தெரிவித்துள்ளனர். ஜோக்கிங் பேட் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in