விஜய் சேதுபதி, ஷாஹித் கபூரின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் எப்படி?

ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி
ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி
Updated on
1 min read

சென்னை: நடிகர்கள் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. வரும் பிப்ரவரி 10 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் இந்த தொடர் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

தி பேமிலி மேன் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகேவும் இணைந்து இதனை எழுதி, இயக்கி உள்ளனர். ஃபார்ஸி தொடரின் பிரதான கதாபாத்திரங்களில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

போலி ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் பணியை மேற்கொள்கிறார் ஷாஹித். அதனை தடுக்கும் போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ட்ரெய்லரில் இருவரது நடிப்பும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நீரும் - நெருப்பும் போல இருவரும் செயல்பட்டுள்ளனர்.

தி பேமிலி மேன் தொடரை போலவே இந்த தொடரும் ஹிட் அடிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இது க்ரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸியில் நடிகை ராஷி கண்ணா, ரெஜினா மற்றும் புவன் அரோரா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in