பொங்கல் ஸ்பெஷலாக ஓடிடியில் என்னென்ன படங்களை பார்க்கலாம்?

பொங்கல் ஸ்பெஷலாக ஓடிடியில் என்னென்ன படங்களை பார்க்கலாம்?
Updated on
1 min read

பொங்கல் திருநாளையொட்டி திரையரங்குகளில் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’, பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படங்கள் வரிசை கட்டுகின்றன. இந்தs சூழலில் வீட்டில் ஓடிடியில் படம் பார்க்க விரும்புபவர்களுக்காக அண்மையில் ஓடிடியில் எந்தெந்த படங்கள் வெளியாகின என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ் படங்கள்: விஷ்ணுவிஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி தற்போது காணக்கிடைக்கிறது. அத்துடன் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ வடிவேலு ரசிகர்களுக்காக நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது. விஷால் ரசிகர்கள் சன்நெக்ஸ்டில் ‘லத்தி’ படத்தை 14-ம் தேதி முதல் பார்க்கலாம்.

சிறப்பு பரிந்துரையாக ப்ளாக் காமெடி பாணியில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ‘உடன்பால்’ படம் படத்தை கண்டு ரசிக்கலாம். படம் ஆஹா ஓடிடியில் காணக்கிடைக்கிறது. புதிய கதைக்கள விரும்பிகள் சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கும் ‘ஸ்டோரி ஆஃப் திங்க்ஸ்’ ஆந்தாலஜியை முயற்சித்துப் பார்க்கலாம்.

மலையாள படங்கள்: ‘சௌதி வெல்லக்கா’ (சோனி லிவ்), ‘முகுந்தன் உன்னி அசோஷியேஷன்’ (ஹாட்ஸ்டார்), ‘அறியிப்பு’ (நெட்ஃப்ளிக்ஸ்), ‘இனி உதாரம்’ (ஜீ5), ‘தட்டசேரி கூட்டம்’ (ஜீ5) படங்களைப்பார்க்கலாம். புதிதாக பிரித்விராஜின் ‘காபா’ படத்தை 19-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் காண முடியும்.

இந்தி மற்றும் தெலுங்கு படங்கள்:மீ’ (நெட்ஃப்ளிக்ஸ்), ‘ஃபோன் பூத்’ (அமேசான் ப்ரைம்), ‘டபுள் எக்ஸ்எல்’ (நெட்ஃப்ளிக்ஸ்) படங்களைப் பார்க்கலாம். தெலுங்கு பட விரும்பிகள் ‘ஹிட் தி செகண்ட் கேஸ்’ படத்தை அமேசான் ப்ரைமில் கண்டு ரசிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in