

‘தி பேமிலி மேன்’ வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே அடுத்து இயக்கியுள்ள தொடர், ‘ஃபார்ஸி’. க்ரைம் த்ரில்லர் தொடரான இதில் இந்தி நடிகர் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா, புவன் அரோரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இத்தொடர் வெளியாகிறது.