விஜய் சேதுபதி, ஷாஹித் கபூரின் ‘ஃபார்ஸி’ சர்ப்ரைஸ் முதல் பார்வை

விஜய் சேதுபதி, ஷாஹித் கபூரின் ‘ஃபார்ஸி’ சர்ப்ரைஸ் முதல் பார்வை
Updated on
1 min read

விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் நடிக்கும் ‘ஃபார்ஸி’ இணையத் தொடரின் முதல் பார்வை சர்ப்ரைஸாக வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ஃபேமிலி மேன்’ இணைய தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்திருந்த இந்த தொடரை ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர். இவர்கள் இணைந்து அடுத்து இயக்கும் புதிய இணைய தொடர் ‘ஃபார்ஸி’.

வரும் பிப்ரவரி 10-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்தத் தொடர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடரில் நடிக்கும் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் ஷாயித் கபூரின் தோற்றத்துடன் கூடிய முதல் பார்வையை சீரிஸ் குழு வெளியிட்டுள்ளது.

துப்பாக்கியை வைத்துக்கொண்டு கேமராவைப் பார்ப்பது போன்ற வில்லத்தனமான தோற்றத்துடன் விஜய் சேதுபதி நின்றிருக்கும் முதல் பார்வை கவனம் பெற்றுள்ளது. அதேபோல ஷாஹித் கபூர் ரக்கட் பாய் தோற்றத்துடன் நின்றிருக்கும் மற்றொரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதில் ஷாஹித் கபூர் போஸ்டரில், ‘யார் இந்த ஃபார்ஸி’ என தலைப்பிட்டு அமேசான் ப்ரைம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும் ஃபார்ஸி தொடரில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எட்டு எபிசோடுகளைக் கொண்ட இத்தொடர் நகைச்சுவையுடன் கூடிய க்ரைம் - த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in