

ஃபாசில் ஜோசஃப் நடிப்பில் உருவான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மலையாள படம் வரும் டிசம்பர் 22-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
இந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படம், விபின் தாஸின் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. ஃபாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், அர்ஜூ வர்கீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.6 கோடியில் உருவாக்கப்பட்டது.
படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபீஸில் ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், படம் வரும் டிசம்பர் 22-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.