

அக்ஷய் குமார் நடித்துள்ள 'ரக்ஷா பந்தன்' திரைப்படம் இம்மாதம் 5-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘ரக்ஷா பந்தன்’. இதில் நாயகியாக பூமிகா பட்னேகர் நடித்திருந்தார். ஹிமேஷ் ரஷ்யாமியா இசையில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ஆமீர்கானின் 'லால் சிங் சத்தா' படத்துடன் மோதியது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவான படம் மொத்தமாக ரூ.60 கோடியை வசூலித்தது. குடும்ப படமான இது அக்ஷய் குமாரின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், இப்படம் அக்டோபர் 5-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.