‘பபூன்’ முதல் ‘ரெண்டகம்’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘பபூன்’ முதல் ‘ரெண்டகம்’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

  • தியேட்டர் ரிலீஸ்: கருணாஸ், ரித்விகா நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதார்' திரைப்படம் நாளை (செப்டம்பர் 23) திரையரங்குகளில் வெளியாகிறது.
  • வைபவ், அனேகா, ஜோஜூஜார்ஜ் நடித்துள்ள 'பபூன்' நாளை (செப்.23) திரையரங்குகளில் வெளியாகிறது.
  • அதர்வா நடிக்கும் 'ட்ரிக்கர்' திரைப்படம் நாளை (செப்.23) திரையரங்குகளில் வெளியாகிறது.
  • குஞ்சாகா போபன், அரவிந்த் சாமியின் 'ரெண்டகம்' படத்தை நாளை (செப்.23) திரையரங்குகளில் காணலாம்.
  • அனிஷ் கிருஷ்ணா இயக்கும் 'கிருஷ்ணா விருந்தா விஹாரி' (Krishna Vrinda Vihari) தெலுங்கு படம் நாளை திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
  • மாதவன் நடிக்கும் இந்திப் படமான 'தோகா ரவுண்ட் D கார்னர்' (Dhokha - Round D Corner) நாளை வெளியாகிறது.
  • ஆசீஃப் அலி, நிகிலா விமல் நடிக்கும் 'கொத்து' (Kotthu), அபிலாஷ்குமாரின் 'சட்டம்பி' (Chattambi) உள்ளிட்ட மலையாள படங்களை திரையில் நாளை காணலாம்.
  • 'அவதார் ரீ ரிலீஸ்' (Avatar Re-release) ஹாலிவுட் படம் வெளியாக உள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: அனூதீப் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு படமான 'ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ' (First Day First Show) திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமன்னாவின் 'பப்ளி பவுண்ஸர்' (Babli Bouncer) இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: தனுஷ், நித்யாமேனன் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' வரும் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகிறது. விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் இன்று (செப்.22) வெளியாகிறது. அருள்நிதி நடிப்பில் உருவான 'டைரி' திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது.

இணையதள தொடர்கள்: 'ட்யூட்' (Dude S2) (இந்தி) தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. 'தி ரெஸிடன்ட்' (The Resident S6) ஆங்கிலத்தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடியில் செப்.20ம் தேதியிலிருந்து காணக் கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in