Published : 16 Aug 2022 02:43 PM
Last Updated : 16 Aug 2022 02:43 PM

‘யானை’, ‘பன்னிகுட்டி’ - இந்த வார ஓடிடி படங்கள்

இந்த வாரம் ஓடிடியில் அருண் விஜய் நடித்த 'யானை' திரைப்படம் வெளியாக உள்ளது. அதேபோல யோகிபாபு, கருணாகரன் நடித்துள்ள 'பன்னிகுட்டி' தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

அருணாச்சலம் முருகையன் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடித்த திரைப்படம் 'பன்னிகுட்டி'. லைகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராமர், தங்கதுரை, சிங்கம்புலி, திண்டுக்கல் ஐ லியோனி, லக்‌ஷ்மி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் கடந்த ஜூலை 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இந்தப் படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் கடந்த 14-ம் தேதி வெளியானது. ஜாலியான காமெடி கதைக்களத்தில் உருவான இப்படத்தை தற்போது சன்நெக்ஸ்டில் காணலாம்.

அதேபோல, இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த திரைப்படம் 'யானை'. ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு,ராதிகா சரத்குமார், அம்மு அபிராமி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x