‘குலுகுலு’ முதல் ‘பேப்பர் ராக்கெட்’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘குலுகுலு’ முதல் ‘பேப்பர் ராக்கெட்’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
2 min read

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெற்றி நடிப்பில் கிருஷ்ணா பரமாத்மா இயக்கியுள்ள 'ஜோதி' இன்றும், அம்மு அபிராமி, செங்குட்டுவன் நடிப்பில், 'பேட்டரி' திரைப்படம் நாளையும் வெளியாகிறது.

இயக்குநர் ரத்னகுமார் இயக்கி, சந்தானம் நடித்துள்ள 'குலுகுலு' படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.

கிச்சா சுதீப் நடித்துள்ள 'விக்ராந்த் ரோனா' கன்னடப் படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆதித்ய ராய் கபூர், ஜான் ஆப்ரகாம், திஷா பட்டானி நடித்துள்ள 'எக் வில்லன் ரிட்டர்ன்ஸ்' படத்தை நாளை முதல் திரையில் காணலாம்.

நேரடி ஓடிடி ரிலீஸ்: 'மதுபானக்கடை' இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கி, சிபிராஜ், அதுல்யா ரவி, மஞ்சிமா மோகன் நடித்துள்ள 'வட்டம்' திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

விஜய்சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள '19(1)' மலையாள படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நாளைவெளியாக உள்ளது.

ஜான்வீ கபூர் நடித்துள்ள 'குட்லக் ஜெர்ரி' (Good Luck Jerry) ஹிந்தி படத்தை ஹாட்ஸ்டாரில் நாளை காணலாம்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: மாதவன் இயக்கி நடித்துள்ள 'ராக்கெட்ரி தி நம்பி விளைவு' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த 26-ம் தேதி வெளியானது.

கிரண் ராஜ் இயக்கத்தில் ரக்சித் ஷெட்டி நடித்த '777சார்லி' திரைப்படம் வூட் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

ராபர்ட் பேட்டிசன், ஜோய் கிராவிட்ஸ் நடித்து மார்ச் மாதம் வெளியான 'தி பேட் மேன்' (The Batman) திரைப்படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேற்று வெளியாகியுள்ளது.

வெப் சீரிஸ்: காளிதாஸ் ஜெயராமன், தன்யா ரவிச்சந்திரன், கருணாகரன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள 'பேப்பர் ராக்கெட்' இணையதள தொடர் நாளை முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in