'My Daughter Joined a Cult' - நித்யானந்தா குறித்து டிஸ்கவரி+ ஓடிடி தளத்தில் வெளியான ஆவணப்படம்

'My Daughter Joined a Cult' - நித்யானந்தா குறித்து டிஸ்கவரி+ ஓடிடி தளத்தில் வெளியான ஆவணப்படம்
Updated on
1 min read

தன் மீதான பல்வேறு குற்ற வழக்குகளுக்காக பரவலாக அறியப்படுபவர் நித்யானந்தா. இப்போது அவர் குறித்து 'My Daughter Joined a Cult' என்ற ஆவணப்படம் டிஸ்கவரி+ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் Bikram: Yogi, Guru, Predator மற்றும் Bad Boy Billionaires: India போன்ற ஆவண இணைய தொடர்கள் வெளியாகி இருந்தன. இந்த தொடர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் குறித்து பேசி இருந்தன. இந்நிலையில், இப்போது நாட்டை விட்டு வெளியேறி ரகசியமாக வாழ்ந்து வரும் நித்யானந்தா குறித்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது. மூன்று அத்தியாயங்களாக இந்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது. இதில் நித்யானந்தா குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு செய்தி நிறுவனங்களின் நியூஸ் ஃபுட்டேஜ், நித்யானந்தாவின் முன்னாள் சீடர்கள், பத்திரிகையாளர்கள், நித்யானந்தாவின் பிரசங்க வீடியோ காட்சிகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. நித்தியுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் இதில் பேசி உள்ளனர். அவரது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்தில் நடந்த பெண் சீடர் மர்ம மரணம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்கள், ஆபாச வீடியோ என நித்யானந்தாவின் எழுச்சி தொடங்கி வீழ்ச்சி வரையில் இதில் பேசப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அத்தியாயமும் சராசரியாக 40 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த ஆவணப்படம் ஸ்ட்ரீமாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in