பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடத்தில் கட்டண வசூலைத் தொடங்கிய நெட்ஃப்ளிக்ஸ்: சந்தாவை ரத்து செய்யும் பயனர்கள்

பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடத்தில் கட்டண வசூலைத் தொடங்கிய நெட்ஃப்ளிக்ஸ்: சந்தாவை ரத்து செய்யும் பயனர்கள்
Updated on
1 min read

புது டெல்லி: பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை விரும்பாத பயனர்கள் சந்தாவை ரத்து செய்வதாகவும் தெரிகிறது.

கடந்த மார்ச் மாத வாக்கில் பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க உள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இது கொள்கை ரீதியான முடிவு எனவும் தெரிவித்திருந்தது அந்நிறுவனம். ஒரே பயனர் கணக்கை பயனர்கள் தங்களது நண்பர்கள் வட்டத்தில் பகிர்வதை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறையை கொண்டு வருவதாவாகவும் நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்திருந்தது. மேலும், தங்கள் கணக்கு விபரங்களை பகிர விரும்பும் பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், பெரு, சிலி மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகளில் இதற்கான சோதனை முயற்சியை நெட்ஃப்ளிக்ஸ் மேற்கொண்டதாக தகவல். ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வணிக நோக்கத்திற்கு பயனர்கள் வேறு விதமாக ரியாக்ட் செய்துள்ளதாகவே தெரிகிறது.

பாஸ்வேர்ட் ஷேரிங் விவகாரத்தால் அதிருப்தி அடைந்த பயனர்கள் சந்தாவையே ரத்து செய்துவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பயனர்கள் இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், பாஸ்வேர்டை பகிரும் சில பயனர்களுக்கு அது தொடர்பான அலர்ட் எதுவும் கிடைக்கவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இது சோதனை முயற்சி என்றாலும் படிப்படியாக உலக நாடுகளில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தெரிகிறது. இந்தியாவில் எப்போது இந்த பாஸ்வேர்ட் ஷேரிங் கட்டண வசூல் நடைமுறைக்கு வரும் என தெரியவில்லை. அதனால், இந்தியாவில் இப்போதைக்கு நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் ரிலாக்ஸாக இருக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in