மும்பையும் ஆறு 'வேற லெவல்' காதல்களும்: கவனம் ஈர்க்கும் Modern Love: Mumbai ட்ரெய்லர்

மும்பையும் ஆறு 'வேற லெவல்' காதல்களும்: கவனம் ஈர்க்கும் Modern Love: Mumbai ட்ரெய்லர்
Updated on
1 min read

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இம்மாதம் 13-ஆம் தேதி முதல் 'மார்டன் லவ்: மும்பை' (Modern Love: Mumbai) என்ற வெப் சீரிஸ் வெளியாகிறது. இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸை த்ருப் ஷேகல், அலன்கிர்தா ஷிர்வஸ்தா, நுபுர் அஸ்தானா, விஷால் பரத்வாஜ், ஹன்சல் மேத்தா,சோனாலி போஸ் ஆகிய ஆறு படைப்பாளிகள் இயக்கியுள்ளனர்.

இந்தத் தொடரின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. 2.29 நிமிடம் ஓடும் இந்த ட்ரெய்லர் மும்பையின் அறிமுகத்துடன் தொடங்குகிறது. மும்பையின் ஆற்றலை பார்வையாளருக்கு ஒரு குரல் அறிமுகப்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

எழுத்தாளரான ஒரு பெண் தனது கணவரின் ஆதரவு இல்லாமல் புலம்புகிறார்... இளைஞனால் ஈர்க்கப்படும் திருமணமான பெண்... ஓர் இளைஞன் மற்றுமொரு இளைஞன் மீது காதல் கொள்கிறான்... தனது மகனின் காதலி சைவ விரும்பி என்பதால் அவளை வெறுக்கும் தாய்... திருமணமான தம்பதி வாழ்வில் வரும் துயரம்... வழக்கத்துக்கு மாறான முறையில் நண்பரைக் கண்டறியும் பெண்... இப்படியாக கதைக்களமும் கதைகளும் முன்னோட்டமாக ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான இயக்குநர்களின் பங்களிப்புடன் வந்துள்ள இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸான 'Modern Love: Mumbai'-ன் ட்ரெய்லர், சினிமா ஆர்வலர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in