

சென்னை: கவின் நடிப்பில் வெளியான ‘கிஸ்’ திரைப்படம் வரும் நவம்பர் 7 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமான படம் ‘கிஸ்’. இதில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விடிவி கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோம்-காம் ஃபேண்டசி பாணியிலான இந்த படம் கடந்த செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில் இப்படம் தற்போது வரும் நவம்பர் 7 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து நடிகர் கவின் கூறும்போது, “இதில் என் கதாபாத்திரம் ஒரு சாதாரண ரொமாண்டிக் பாத்திரம் அல்ல. அதில் பல சவால்களும் உணர்ச்சிகளும் நிறைந்திருந்தன. காதலை நம்பாத ஒருவனின் மாற்றத்தை வெளிப்படுத்துவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. ஜீ5 ஓடிடி தளத்தில் இப்போது ‘கிஸ்’ படமும் வெளியாகிறது என்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.