

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் ஷ்ரத்தா நாத், சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வெப் தொடர், ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’.
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள இத்தொடர், விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தைச் சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது பற்றிய கதையைக் கொண்டது.
டிஜிட்டல் உலகில் காதல், உண்மை, துரோகம் ஆகியவற்றை ஆராயும் இத்தொடர் பற்றி இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா கூறும்போது, “இந்த தொடரின் உண்மையான ‘பவர் பிளேயர்’ ஷ்ரத்தா நாத் தான். கேம் டெவலப்பர் காவ்யா கதாபாத்திரத்தில் அவர், கதையை முன்னெடுத்து செல்வது மட்டுமில்லாது, கதையில் ஆதிக்கமும் செலுத்துகிறார். அமைதியான தீவிரத்துடனும் உண்மையான உணர்வுகளுடன் கதையை கடத்துகிறார்.
ஒவ்வொரு எபிசோடின் ரகசியமும் பார்வையாளர்களை உள்ளிழுக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. கடைசி ஃபிரேம் வரை வரும் புத்திசாலித்தனமான திருப்பங்கள் ஆச்சரியப்பட வைக்கும். டிஜிட்டல் திரைகள் நம் வாழ்வைப் பெருமளவு ஆக்கிரமித்திருக்கும் வேளையில், இந்தத் தொடர் நிச்சயம் எச்சரிக்கை மணியாக இருக்கும். இது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பு. காதலுக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் சிக்கியிருக்கும் ஜோடியாக, ஷ்ரத்தா, சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு, கதைக்கு மென்மை மற்றும் பதற்றம் இரண்டையும் கொண்டு வரும் விதமாக அமைந்திருக்கிறது” என்றார்.