

அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘ராம்போ’. இதை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, நகர வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். இளம்குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு உதவ முயற்சிக்கிறான்.
அதனால் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடிசம்பவங்கள்தான் படம். தன்யா ரவிச்சந்திரன், ‘பிக் பாஸ்’ ஆயிஷா, மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ், ஹரீஷ் பெரேடி, விடிவி கணேஷ் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் அக்.10-ம் தேதி வெளியாகிறது.