

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் வெப் தொடர், ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்காக அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இதில், சாந்தினி, ஷ்யாமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சந்த், தீரஜ் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடர் அக்.2 அன்று வெளியாக இருப்பதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.
இந்த வெப் தொடர் பற்றி இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா கூறும்போது, “இது வெறும் த்ரில்லர் மட்டுமல்ல. ‘ஹைப்பர் கனெக்டட்’ உலகின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நகரும் இக்கதை நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பாக இருக்கும்” என்றார்.