

ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி ‘கிங்டம்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கெளதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் ‘கிங்டம்’. ஜூலை 31-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்வியை தழுவியது. இதனால் இதன் 2-ம் பாகம் திட்டமும் தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை நாக வம்சி தயாரித்திருந்தார்.
தற்போது ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி ‘கிங்டம்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 5 மொழிகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஓடிடி தளத்தில் எவ்வாறான விமர்சனங்களைப் பெறப்போகிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.
சத்ய தேவ், பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் ‘கிங்டம்’ படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே வேளையில் இலங்கை அகதிகளை தவறாக சித்தரித்ததாக தமிழகத்தில் சர்ச்சையும் உருவானது குறிப்பிடத்தக்கது.