

ஓடிடியில் ஆகஸ்ட் 22-ம் தேதி ‘மாரீசன்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25-ம் தேதி வெளியான படம் ‘மாரீசன்’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக பெரிதாக எடுபடவில்லை. ஆனால், படக்குழுவினருக்கு நல்ல லாபம் கிடைத்தது.
தற்போது இப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் மட்டுமன்றி இதர மொழிகளிலும் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தை ஆர்.பி.செளத்ரி தயாரித்திருந்தார். இதில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், லிவிங்ஸ்டன், கோவை சரளா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக கலைச்செல்வன், எடிட்டராக ஸ்ரீஜித் சாரங் மற்றும் இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.