

சுரேஷ் கோபி நடித்த ‘ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல் ஓடிடியில் வெளியாக உள்ளது.
பிரவீன் நாராயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி பிரதான கதாபாத்திரத்தில் நடித்த படம் ‘ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா’. இதில் சுரேஷ் கோபியுடன் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திவ்யா பிள்ளை, சுருதி ராமச்சந்திரன், அஸ்கர் அலி, மாதவ் சுரேஷ் கோபி, பைஜு சந்தோஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஜூலை 17ஆம் இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது குறித்து சுரேஷ் கோபி கூறும்போது, “டேவிட் ஏபெல் டோனோவனின் கதாபாத்திரம் இன்றைய உலகில் நேர்மை மற்றும் தார்மீக சிக்கலை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்து பிறந்தது. பாதிக்கப்பட்டவரின் சார்பாக நீதிமன்றத்தில் போராடுவது சவால் மிகுந்த ஒரு பாத்திரம். ஆனால் அது என்னை நிலைநிறுத்தியது. படம் ஓடிடியில் வெளியாகும்போது பார்வையாளர்கள் அதன் ஆன்மாவுடன் இணைந்திருப்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன், மேலும் அவர்கள் ஜானகியின் குரலையும் கேட்பார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.