ஓடிடியில் ஆக.8-ல் ‘மாமன்’ ரிலீஸ்

ஓடிடியில் ஆக.8-ல் ‘மாமன்’ ரிலீஸ்
Updated on
1 min read

ஜீ5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி ‘மாமன்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரி நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் 50 கோடியை கடந்தது. அப்படத்துக்குப் பின்பு வெளிவந்த எந்தவொரு படமும் இந்தளவுக்கு வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘தலைவன் தலைவி’ படத்தின் வசூல் இதனை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’மாமன்’ படம் வெளியாகும் முன்பே, அதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையினை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியது. ஒரே சமயத்தில் இரண்டிலும் வெளியிட சரியான தருணத்திற்காக காத்திருந்தது. தற்போது ஆகஸ்ட் 8-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜீ தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் என தெரிகிறது.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மாமன்’. இப்படத்தினை ‘கருடன்’ படத்தினை தயாரித்த குமார் தயாரித்திருந்தார்.

மாமன் வருகிறார்

The biggest family blockbuster of 2025 #Maaman streaming on ZEE5 from August 8!@sooriofficial @p_santh @HeshamAWmusic
@kumarkarupannan @larkstudios1 @AishuL #Swasika #RajKiran #JayaPrakash @Bala_actor #BabaBaskar @ActorViji @nikhila_sankar_pic.twitter.com/FHcpGwF70d

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in