‘கலியுகம்’ ஜூலை 11-ல் ஓடிடியில் ரிலீஸ்!

‘கலியுகம்’ ஜூலை 11-ல் ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஜூலை 11-ம் தேதி ‘கலியுகம்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமோத் சுந்தர் இயக்கத்தில் வெளியான படம் ‘கலியுகம்’. எந்தவித விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் வெளியான இப்படம் மக்களிடையே எவ்வித வரவேற்பையும் பெறவில்லை. இதன் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படம் ஜூலை 11-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சைக்காலஜிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாக்கப்பட்டது. இதனை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது.

When the world ends, who do you become?
Hope, fear, and survival collide in a future gone dark.

Kaliyugam — streaming from 11th July on SunNXT.#KaliyugamOnSunNXT #DystopianDrama #StreamingFromJuly11 #EdgeOfDarkness #Kaliyugam #NewOnSunNXT #FutureUnraveled #WatchItOnSunNXTpic.twitter.com/DX64AIVYZf

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in