Published : 04 Jul 2025 09:11 AM
Last Updated : 04 Jul 2025 09:11 AM

நெட்பிளிக்ஸில் ஸ்குவிட் கேம் சீசன்-3 தொடரை மூன்றே நாளில் 6 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து சாதனை!

புதுடெல்லி: தென்கொரியாவில் உருவாகி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’.

கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடராக ‘ஸ்குவிட் கேம்’ உள்ளது. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹிவாங் டாங் ஹியூக் இயக்கி இருந்தார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.

தொடரின் முதல் சீசனின் வெற்​றியை தொடர்ந்து இதன் 2-வது சீசன் கடந்த டிசம்​பர் மாதம் வெளி​யானது. இதனையடுத்து இந்​தத் தொடரின் அடுத்த சீசன் எப்​போது வரும் என்று ரசிகர்​கள் எதிர்​பார்த்​திருந்த நிலை​யில், இந்த தொடரின் 3-வது சீசன் கடந்த மாதம் 27-ம் தேதி நெட்​பிளிக்ஸ் ஓடிடி தளத்​தில் வெளி​யானது.

இந்த ‘ஸ்​கு​விட் கேம் சீசன் 3’ தான் இந்த தொடரின் கடைசி பாகம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. 6 எபிசோட்​களைக் கொண்ட இந்த சீசன், அடுத்​தடுத்து திருப்​பங்​களால் நிறைந்​திருப்​ப​தாக ரசிகர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இது வெளி​யான 3 நாட்​களில் மட்​டும் தொடரை 6.01 கோடி பேர் பார்த்து சாதனை படைத்​துள்​ளனர்.

மேலும் 93 நாடு​களில் நெட்​பிளிக்ஸ் தளத்​தில் இந்த ‘ஸ்கு​விட் கேம் ​- சீசன் 3’ தொடர் முதலிடத்​தில் உள்​ளது. நெட்​பிளிக்ஸ் தளத்​தில் இது ஒரு மிகப்​பெரிய சாதனை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. ஸ்கு​விட் கேம் சீசன்-2 வெளி​யான நான்கு நாட்​களில் அதிக அளவில் மக்​கள் பார்த்​திருந்​தனர். அந்த எண்​ணிக்​கையை ஸ்கு​விட் கேம்-3 தற்​போது 3 நாட்​களி​லேயே முறியடித்​துள்​ளது.ஸ்குவிட் கேம் தொடரில் இடம்பெறும் ஒரு காட்சி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x