ஓடிடி தகவல்
ரேவதி இயக்கிய ‘குட் வைஃப்’ வெப் தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ‘குட் வைஃப்’ என்ற வெப் தொடரின் தமிழ் வடிவம் அதே பெயரில் உருவாகியுள்ளது. இதில், பிரியாமணி, சம்பத் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை நடிகையும் இயக்குநருமான ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் அவர் இயக்குநராக ஓடிடியிலும் கால் பதித்துள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் இத்தொடர் பற்றி ரேவதி கூறும்போது, "இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்து அவர் பல சவால்களை எதிர்கொள்கிறார். இந்த தொடரை இயக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி, சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி” என்றார். இந்த தொடரின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
